2016 ஆகஸ்ட் திங்கள் 8ஆம் நாள் உயர்திரு வெ. இறையன்பு, ஐஸ்இ.ஆ.ப அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில் இனிதே துவங்கிய நம் தமிழ் மன்றம் ஒவ்வொரு மாதமும் தவறாமல் மன்றக் கூட்டத்தினை பல்வேறு தலைப்புகளில் நடத்திக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தமிழர் திருநாளாம் பொங்கல், மூன்று நாள் முத்தமிழ் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயல் தமிழ் கொண்டாட்டத்தில் பட்டிமன்ற புகழ் திரு. ராஜா தலைமையில் பட்டிமன்றமும், இசைத் தமிழ் கொண்டாட்டத்தில் சிம்மக் குரலோன் உயர்திரு சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் தமிழிசை பாடல்களும், நாடகத் தமிழ் கொண்டாட்டத்தில் உயர்திரு. ஞாநி குழுவினரின் நாடகமும் சிறப்பு சேர்த்தது.
ஏப்ரல் மாதக் கூட்டம் சித்திரை திருவிழாவாக கொண்டாடப்பட்டது. நம் மன்ற உறுப்பினர்களின் பங்களிப்பில் “பாரதிதாசன்” அவர்களின் இருண்ட வீடு நாடகமும், கண்ணகியின் மதுரை எரிப்பு சம்பவ நாடகமும், தமிழிசை பாடல்களும் கண்களுக்கும், செவிகளுக்கு விருந்தாக அமைந்தது.
தமிழ் மன்றம் மனமகிழ் மன்றத்தோடு இணையப் பெற்று மேலும் பீடு நடை போடத் துவங்கியது.
தமிழ் கூறும் நல்லறிஞர்கள் திரு. கு. ஞான சம்பந்தம், திரு. மாது, திரு. லேனா தமிழ்வாணன், திரு. அருள்பிரகாசம், புலவர் இராமலிங்கம், திரு. ராமச்சந்திரன், நீயா நானா கோபிநாத் போன்றோரை அழைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி மன்ற உறுப்பினர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த பேரிடர் காலத்திலும் இணையம் வழியே மாதாந்திர கூட்டத்தை மன்றத்தினரின் பெரும் பங்களிப்போடு தமிழ் மன்றம் நடத்திக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
INCOME TAX SPORTS & RECREATION CLUB
No. 121, M.G. Road, Nungambakkam, Chennai-600 034.